அதிக அளவில் இ மெயில் பயன்படுத்தப்படுவதால், தங்களுக்கு ஒரு நாளில், 88
நிமிடம் சேமிக்கப்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். இதில், எழுத்து வடிவில்
அனுப்பப்படும் இமெயில் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு, 53 நிமிடம்
சேமிக்கப்படுகிறது. பணியாற்றுபவர்களில், 25 சதவீதம் பேர் தங்களது பணி
நிமித்தம், இ மெயில் அனுப்ப, “ஸ்மார்ட்’ போன்களை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், ஆண்டு ஒன்றுக்கு, 22 நாட்கள்
சேமிக்கப்படுகின்றன என்பதே, இந்த ஆய்வின் முக்கிய அம்சம்.இந்த ஆய்வை
மேற்கொண்ட, கில் பவுன் நிக் கூறியதாவது:
மொபைல் போன்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு அம்சங்கள்
சேர்க்கப்பட்டுள்ளதால், பணியிடம் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இவை அதிக
அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், “ஸ்மார்ட் போன்’
பயன்படுத்துபவர்களில், 82 சதவீதம் பேர், அதில் இடம் பெற்றுள்ள எல்லா விதமான
அம்சங்களையும் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.