புற்றுநோய் எனப்படும் கேன்சரைக் கண்டுபிடிக்க அதிக
அளவு ரத்தம் எடுப்பது மற்றும் வலிமிகுந்த தசை டெஸ்ட் எடுப்பது
போன்றவற்றுக்கு இனி அவசியமிருக்காது.
ஒரு துளி ரத்தம் முலம் புற்று நோயை கண்டுபிடித்து விட முடியும் என
அறிவித்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். இதற்கான நவீன தொழில் நுட்பமும்
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகர
ஆராய்ச்சியாளர்கள் உலகின் முன்னணி மருத்துவ கம்பெனி உதவியுடன் ஒரு புதிய
ஆய்வை மேற்கொண்டனர்.
அதன் மூலம் மார்பகம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட பலவிதமான புற்று
நோய்களை கண்டறிந்துள்ளனர். தற்போது இதே முறையில் உலகின் பல நாடுகளில்
இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரத்த பரிசோதனைக்கு மைக்ரோசிப்
பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிப் வழியாக ரத்தம் செலுத்தப்படுகிறது. அப்போது புற்று நோயை
ஏற்படுத்தும் செல் அதில் பந்து போன்று ஒட்டிக்கொள்கின்றன. இச்சோதனை புற்று
நோயாளிகளின் உடலில் வலியை ஏற்படுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த சோதனை முறையை உலகம் முழுக்க நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.
No comments:
Post a Comment