28 May 2013

உங்கள் Android தொலைபேசி கவனம்

நீங்கள் Android தொலைபேசி பயன்படுத்துகிறீர்களா? அதற்கான application programeகளை, கூகுள் பிளே(google play) ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொள்கிறீர்களா? சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். BadNews என்ற பெயரில் பல மால்வேர்(Malware) புரோகிராம்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த(Malware programme) மால்வேர் புரோகிராம், Android போன்களில் (சாம்சங் காலக்ஸி(samsung galaxy) அல்லது எல்.ஜி(LG). அல்லது எச்.டி.சி(HTC) போன்றவை) அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப குறும் தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளது. இதனால், நாம் தொலைபேசி சேவை நிறுவனத்தில் கட்டி வைத்துள்ள பணம் வேகமாகத் தீர்ந்து போகிறது. இதுவரை 90 லட்சம் பேர் இந்த BadNews மால்வேர் புரோகிராமினை இறக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது. 
எந்த (application)அப்ளிகேஷன் programme வழியாக இந்த மால்வேர்(malware) தொலைபேசிகுள் செல்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புரோகிராம்(programme), தொலைபேசி செயல்படுவதைக் கெடுப்பதில்லை. எல்லாவகையான programmeகளுடனும் இந்த (malware)மால்வேர் செல்வதாக லுக் அவுட் (lookout)என்னும் மொபைல் போன் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் குறித்த புரோகிராம்(programme) ஒன்றுடன் இந்த மால்வேர்(malware) சென்றுள்ளதை, இந்நிறுவனம் அண்மையில் கண்டறிந்துள்ளது. இன்னொரு நிறுவனம், இந்த BadNews மால்வேர் “Savage Knife” என்ற கேம் புரோகிராமுடன் அதிகம் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இதே போல 32 புரோகிராம்களுடன் bad news மால்வேர் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதுவரை 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம். எனவே, அங்குள்ள நண்பர்கள் வழியாக ஆண்ட்ராய்ட் போன்களைப் பெற்றவர்கள் சற்று விழிப்புடன் இருக்கவும். மற்றவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இங்கு வர எத்தனை நாள் எடுக்கும்? ஒரே நாளில் கூட வரலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, கவனத்துடன் புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அல்லது இந்த மால்வேர் புரோகிராமினைக் கட்டுப்படுத்தும் புரோகிராம் கிடைக்கும் வரை காத்திருக்கவும்.



No comments:

Post a Comment