Showing posts with label Recruitment. Show all posts
Showing posts with label Recruitment. Show all posts

03 July 2013

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள்
பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
 இல்லற வாழ்க்கை
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
பாரதியார் மீது பற்று      
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
அவரது படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
Read more ...

02 July 2013

உங்களால் முடியும் - படியுங்கள்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) இரண்டாம் தாளில் 15௦-க்கு 12௦ மதிப்பெண்கள் பெற்று, சமூக அறிவியல் பாடப்பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சபீதா, தற்போது கம்பம், மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்களுக்காக அவர் வழங்கிய டிப்ஸ் இதோ...
 

Read more ...

மகாத்மா காந்தியை பற்றிய சில தகவல்கள்

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தி
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள்
Read more ...

10 May 2013

கல்வித்துறையில் நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

  சென்னை, மே.10 - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து, பணி காலத்தில் காலமான 394 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று (9.5.2013) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 394 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 34 நபர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினா
Read more ...

09 May 2013

பொது அறிவு வினாக்கள் - 3

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும்
மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater
Breathing Apparatus).
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
Cool இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மேடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.
11) அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
12) இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
13) இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
14) பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
15) உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.
16) நியூட்ரான் கண்டறிந்தவர் யார்? சாட்விக்.
17) சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்.
18) மகாவீரர் பிறந்த இடம் எது? வைஷாலி.
19) உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா.
20) ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது? 1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
21) பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை.
22) சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
23) ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? ஜே. கே. ரௌலிங்.
24) சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
25) பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட். 
Read more ...

பொது அறிவு வினாக்கள்

பொது அறிவு


* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.
300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
* 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
Read more ...

11 March 2013

பொது அறிவு விளாக்கள்

1 உலகிலேயே மிகப் பெரிய வைரச் சுரங்கம் இருக்கும் இடம் கிம்பர்லி. இது தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.

2 இரத்தத்தின் முக்கியப் பணி ஆக்ஸிஜனை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்வதுதான்.

3 கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்து சொன்னவர் கெப்ளர் என்ற விஞ்ஞானி.

4 பைபிளில் புதிய ஏற்பாடு எழுதியவர்களில் ஒருவரான புனித லூகாஸ் மட்டும்தான் யூதர் அல்லாதவர்.

5 எலி இனங்களில் 1600 வகைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர்.

6 தனது முழு ரெயில்வே அமைப்பையும் மின்சாரத்தால் இயக்கி வரும் நாடு ஸ்விட்சர்லாந்து.

7 உலகப் புகழ் மோனாலிசா ஓவியம் பாரீஸிலுள்ள லூவர் மியூசியத்தில் உள்ளது.

8 ஒளி புகக்கூடிய திரவம் மைக்கா.

Read more ...

25 July 2012

பொது அறிவு வினாக்கள் பகுதி -1

1, இந்தியாவில் எங்கு முதல் பார்வையற்றோருக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.


 விடை.  அமிர்தசரஸ்


2, பள்ளிக்கட பாதுகாப்பு தினம் கொண்டப்படும் தேதி என்ன


  விடை ஜூலை 16


3, ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொது செயலாளர் யார்


  விடை ட்ரைவ்லே


4, முதன்முதலில் உலகை சுற்றிவந்த விமானி யார்


விடை கிங்ஸ் போர்டு ஸ்மித்

Read more ...

21 July 2012

சவுத் இண்டியன் வங்கியில் கிளார்க் பதவியிடங்களுக்கான அறிவிப்பு

சவுத் இண்டியன் வங்கியில் தற்போது புதியதாக கிளார்க் பதவியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ள. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


பதவியின் பெயர் : புரப்பெனரி ஆப்சீர்
பதவியிடங்கள் : 49
வயது : 30,06,2012 அன்று 26க்குள்
கல்வித்தகுதி. : பட்டப்படிப்பு குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்கவேண்டும்.
(மேலும் தகவல்களுக்கு கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்.)

Read more ...