சென்னை, மே.10 - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து, பணி காலத்தில்
காலமான 394 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர்
ஜெயலலிதா நேற்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று
(9.5.2013) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து
பணிக்காலத்தில் காலமான 394 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை
அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், ஆசிரியர் தகுதித்
தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 34 நபர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பணிநியமன ஆணைகளை வழங்கினா
தினபூமி நாளிதழில் இருந்து
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான ஆசிரியர்கள், நூலகர்கள், அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை 388 நபர்களுக்கும், மூன்றாம் நிலை நூலகர்கள் பணிக்கான பணி நியமன ஆணை 6 நபர்களுக்கும், என மொத்தம் 394 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 34 நபர்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, உருது மற்றும் அம்மொழிகளில் கணிதம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பணிநியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்ட வாரிசுதாரர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகைசெல்வன், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment