நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. காப்பி ஹெண்டிலர் 1.3
இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது.
மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0
இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
3. பாஸ்ட் காப்பி 2.11
காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது.
தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
4. எப் எப் காப்பி 1.0
இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் நான்கு மெனபொருள்கள் மேலே தெரிந்தவரை சொல்லிவிட்டேன். மீதமுள்ளவற்றை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. வலைபக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
இவ்வளவு இருக்கா...? மேலும் அறிய தொடர்கிறேன்...
ReplyDelete