நியூயார்க்: 19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் உலகின் வயதான மனிதர்
என்ற பெருமையைப் பெற்ற ஜப்பானின் ஜிரோமன் கிமுரா என்ற 116 வயது தாத்தா
மட்டும் தான் தற்போது உயிருடன் உள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்தவர் ஜிரோமன் கிமுரா(116). உலகின் வயதான மனிதர் என்ற
பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
ஜப்பானில் உள்ள அஞ்சலகம் ஒன்றில் 45 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 1962ம் ஆண்டு
கிமுரா ஓய்வு பெற்றார். அவருக்கு 5 குழந்தைகள், 14 பேரப்பிள்ளைகள், 25
கொள்ளுப்பேரப்பிள்கள் உள்ளனர். அவரின் கொள்ளுப்பேரப்பிள்ளைகளுக்கு பிறந்த
பிள்ளைகள் 13 பேர் உள்ளனர்.
19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் கிமுரா மட்டும் தான் உயிருடன்
இருக்கிறார். அதே சமயம் அதே 19ம் நூற்றாண்டில் பிறந்த பெண்களில் 21 பேர்
உயிருடன் உள்ளனர். கிமுரா தற்போது கியோடாங்கோவில் தனது 83 வயது மூத்த
மருமகள் மற்றும் பேரனின் 59 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த
இரண்டு பெண்களுமே விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment