இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக
மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி
வருகிறது.இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி
வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது
அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப்
கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள்.
அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
எல்லாமே லைட்டிங் தான்:
வெப்கேமரா பயன்படுத்துவது என்பது ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போன்றதுதான். இங்கே நகரும் ஆப்ஜெக்ட்களைப் படம் பிடிக்கிறோம். எனவே போட்டோ எடுப்பதில் என்ன என்ன அம்சங்களை நாம் கடைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ ,அவற்றையே இங்கும் நாம் பின்பற்ற வேண்டும். இதில் முக்கியமானது லைட்டிங்.
கேமராவின் எல்லையில் வரும் பொருட்கள் மற்றும் ஆட்கள் நல்ல ஒளியில் இருக்க வேண்டியது மிக அவசியம். இதனால் இவற்றின் இமேஜ் நல்ல ஒளியுடனும் துல்லிதமாகவும் இருக்கும். எனவே கம்ப்யூட்டர் முன் அமர்ந்து உங்களை வெப் கேமரா மூலம் படம் எடுப்பதாக இருந்தால் உங்கள் மீது ஒளி விழும் வகையில் சிறிய டேபிள் லைட் ஒன்றை மானிட்டர் அருகே உங்கள் மீது ஒளி விழும் வகையில் அமைப்பது நல்லது.
இதிலும் கூட ஒளி நேரடியாக உங்கள் மீது விழாமல் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு உங்கள் மீது விழுந்தால் உங்களுக்கும் கூச்சம் இருக்காது. ஒளியும் சிறப்பான முறையில் அமையும்.
பேக் ரவுண்ட் லைட்:
உங்களுக்குப் பின்புலத்தில் இருக்கும் ஒளி எவ்வாறு அமைய வேண்டும் என்பதனையும் இங்கு கவனிக்க வேண்டும். உங்கள் மீது விழும் ஒளியைக் காட்டிலும் பின்புறத்தில் மிகவும் பிரகாசமாக ஒளி இருந்தால் கேமராவில் உங்களுடைய உருவம் தெளிவில்லாமல் பிசிறடித்த நிலையில் இருக்கும்.
எனவே உங்கள் முன்னால் இருக்கும் ஒளியைக் கூடுதலான நிலையிலும் பின்புற ஒளியை அதற்கும் குறைவானதாக அல்லது திரை வைத்து நீக்கப்பட்ட நிலையிலும் வைக்க வேண்டும்.
கேமரா அமரும் இடம்:
வெப் கேமரா பயன்பாட்டில் கேமரா அமரும் இடம் முக்கியமான அம்சமாகும். உங்கள் கண்களுக்கு இணையான இடத்தில் கேமரா இருப்பது சிறப்பாகும். இதனால் உங்கள் முகம் தெளிவாக வெளிப்படும். குறிப்பாக பிசினஸ் குறித்த வீடியோ கான்பரன்ஸில் நீங்கள் இருந்தால் இது உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்டும்.
எனவே நேர் எதிரே இருக்கும் மானிட்டரில் கேமராவை உங்கள் முகத்திற்கு இணையான கோட்டில் வைத்திடவும். அதே நேரத்தில் வெப் கேமராவிற்கு மிக நெருக்கமாக நீங்கள் செல்லக் கூடாது.
மானிட்டர் செட்டிங்:
வெப் கேமரா பயன்படுத்தும் போது உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரை முறையாக செட்டிங் செய்திட வேன்டும். பிரைட் னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் ஆகிய இரு செட்டிங்குகளையும் கூடுமானவரையில் குறைத்தே அமைக்க வேண்டும். இதனால் மானிட்டரில் இருந்து வரும் ஒளி உங்கள் முகத்தில் அடிக்காமல் இருக்கும்.
வெப் கேமராவில் நீங்கள் பிடிக்கப்படுவதாக இருந்தால் வெள்ளை நிறத்தில் சட்டை அணிவது நல்லது. இதனால் நல்ல ஒயிட் பேலன்ஸ் கிடைக்கும். நீங்கள் எல்.சி.டி. மானிட்டர் பயன்படுத்துவதாக இருந்தால் மேலும் ஒரு கூடுதல் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வகை மானிட்டரில் போலரைசிங் லைட் வெளிப்படும். இதன் குவியல் படுகையில் உங்கள் கண்களில் கண்ணாடி அணிந்திருந்தால் அது பிரதிபலிக்கப்படும். எனவே கேமரா லென்ஸ் முன்னால் ஒரு போலரைசிங் பில்டர் பொருத்துவது அவசியம்.
பதியும் முன் பொறுமை:
தொடர்ந்து உங்களைப் படம் பிடித்து பதிவதாகவோ அல்லது உடனுடக்குடன் அனுப்புவதாகவோ இருந்தால் பதியத் தொடங்குமுன் சில விநாடிகள் காத்திருக்கவும். ஏனென்றால் வெப் கேமராவிற்கு போகஸ் செய்து பெறும் படத்தை அட்ஜஸ்ட் செய்திட சிறிது நேரம் தேவை.
எனவே பதியும் பட்டனை அழுத்திய பின்னரும் சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருந்து பின் உங்கள் பாடலை ஆடலை வைத்துக் கொள்ளுங்கள்.
ஆடியோ பைல்கள்:
வெப் கேமரா பயன்படுத்துகையில் உங்கள் குரலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனைச் சார்ந்து இருக்க வேண்டாம். கிளிப் ஆன் மைக் அல்லது ஹெட்செட் மைக்ரோ போனைப் பயன்படுத்தவும்.
ஏனென்றால் வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனால் தெளிவாக ஒலியைப் பதிவுசெய்திட இயலாது.
மேலே சொன்ன டிப்ஸ்களுடன் தொடர்ந்து கேமரா பயன்படுத்துகையில் கிடைக்கும் அனுபவத்தினையும் இøணைத்து உங்கள் கற்பனையுடன் வெப் கேமராவினைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பான ஒரு கேமரா மேனாக/பெண்ணாக நீங்கள் உருவாகலாம்.

நல்ல விளக்கம்... நன்றி..
ReplyDelete