20 July 2013

எந்த ஒரு இமெயில் கணக்கில் லாக்கின் செய்யாமல் இலவசமாக இமெயில் அனுப்பலாம்



இணையத்தில் இமெயில் வசதி இலவசமாக தரும் GOOGLE, YAHOO, MSN போன்ற தளங்கள் வழங்கி வருகிறது. இந்த தளங்களில் உள்ள இமெயில்களை பயன்படுத்த இந்த குறிப்பிட்ட தளங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்றால் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி பயன்படுத்த முடியாது போல் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் மின்னஞ்சல் முகவரியில் உள்ளீடு செய்யாமல் எந்த ஒரு மின்னஞ்சலுக்கு இமெயில் அனுப்பும் வசதியை  MAIL ANYONE ANYWHERE மென் பொருள் மூலம் பயன்படுத்தலாம் மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Send Emails Quickly 
 இந்த மென் பொருளை கணிணியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.  மென்பொருளை பொருளை  ஒபன் செய்தாலே போதுமானது போல் இது உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இணைய இணைப்பு வேண்டும்.
 TO என்பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி யும், FROM  என்பதில் நமது முகவரியும் எப்போதும் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியில் கொடுப்பது போல் கொடுத்து கொள்ள வேண்டும். இதில் மேலும் அட்சேட்மெண்ட செய்து மின்னஞ்சல் அனுப்பவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு பயனுள்ளதாக உள்ளதா என்பதை கருத்துகளில் சொல்லவும்
Read more ...

19 July 2013

அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் - பாகம் 1

நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. காப்பி ஹெண்டிலர் 1.3
 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை  141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும்  அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது.
Copy Handler 
 மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0
இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும்  இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது.   அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து.
ExtremeCopy 
 மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
  3. பாஸ்ட் காப்பி 2.11
  காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது.  காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு  அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது.
தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

FastCopy 
4. எப் எப் காப்பி 1.0
 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது.  சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

FF Copy 
 காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் நான்கு மெனபொருள்கள் மேலே தெரிந்தவரை சொல்லிவிட்டேன். மீதமுள்ளவற்றை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.  வலைபக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
Read more ...

18 July 2013

ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா ? இத படிங்க முதல்ல

Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம்.
உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணனி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும்.Smartphoneல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை :
எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம்.

இயங்கு தளம்  :
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது அப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே. இதில் அப்பிள் விலை  கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும்.அதே போல தான் Blackberry, அப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன.


நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), இந்தியர்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது.

இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மொடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1 OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள்.

ஆனால் அதற்கு பின்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம்.

அடுத்து Windows OS. நம் கணனியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது கைபேசி மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும்.

வடிவமைப்பு, டிஸ்ப்ளே :
ஒரு கைபேசி வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும். அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen கைபேசி தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும்.Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும்.

நினைவகம் (Memory) :
அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இது. Smartphoneகள் கணனி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 – 200 MB அவசியம்.External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கமெரா:
பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விடயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கமெரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.

ப்ராசஸர்:
மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இது. உங்கள் கைபேசிக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பேட்டரி (Battery) :
எல்லாமே சரி, பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு கைபேசிக்கு மிகவும் முக்கியமான விடயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).

இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):

நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.

எனக்கு தெரிஞ்சதது இவ்வளவுதான்ங்க
Read more ...

13 July 2013

எந்த வயதினரும் யுடிப்பில் அந்த படம் பார்க்கலாம்


Watch 18+ Videos On Youtube Without Signing In கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் வீடியோக்களை பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் வீடியோக்களை பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் வீடியோக்கள் உள்ளன கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால்  இந்த தளத்தில் எல்லா வயத்தினரும் பார்க்க வேண்டிய  வீடியோக்கள் / பார்க்கா முடியாத வீடியோக்கள் என தரம் பிரித்து வழங்குகின்றன.
பார்க்கமுடியாத வீடியோக்களை  கூகிள் நிறுவனத்தின் இணையவழி பயன்படுத்தி மட்டுமே பார்க்கமுடியும் (அதற்கு வயது குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரி கேட்கப்படும்) இது போன்ற வீடிகோக்களை எவ்வாறு பார்ப்பது என்று  பார்க்கலாம்
முதலில் யுடிப் தளத்தை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்
(எ.கா) http://www.youtube.com

இரண்டாவாதாக இதன் முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள் இது போன்று 
(எ.கா )http://www.youtube.com/watch?v=4Xkh6j7RMqk
இதில் பச்சை நிறத்தில் உள்ளது குறிப்பிட்ட படத்தின் முகவரி

அடுத்ததாக இது போன்று செய்யவும்
http://www.youtube.com/v/4Xkh6j7RMqk?fs=1
இதில் வி என்பதற்கு அருகில் குறிப்பிட்ட படத்தின் முகவரி மேலே உள்ள பேஸ்ட் செய்யவும்
இவ்வளவுதான் இனி எல்லா வீடியோக்களையும் வயது வரம்பின்றி பார்க்கலாம் 
Read more ...

ஐபோன் -5 இல் மறைக்கப்பட்டுள்ள விஷயங்கள்



Read more ...

12 July 2013

பறக்கும் உணவுகள் - அறிவியல் அதிசயம்

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மனிதர்களின் வேலைகளை இலகுபடுத்தியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக லண்டனில் உள்ள உணவகமொன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உபகரணத்தைக் குறிப்பிடலாம்.
லண்டனில் உள்ள யோ!சுசி உணவகமே ஹெலிகொப்டர் போன்ற உபகரணத்தை வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறும் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு ஐ டிரே எனப் பெயரிட்டுள்ளது குறித்த உணவகம்.
குறித்த உபகரணமானது மணிக்கு 25 மைல் வேகத்தில் பறந்துசெல்லக் கூடியது. இது பாரம் குறைந்த காபன் பைபர் பிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
 உணவக ஊழியர்கள் இதன் மூலம் மேசைக்கு உணவினை அனுப்புகின்றனர். அவர்கள் உணவைப் பெற்றதும் ஐ டிரே அவ்விடத்திலிருந்து திரும்பி விடுகின்றது. இதனை ஊழியர்கள் பேட்டின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றனர். தற்போது குறித்த உணவகம் தனது இரண்டு கிளைகளில் மட்டுமே இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை தனது 64 கிளைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது.
குறித்த நிறுவனமானது இதற்கு முன்னரும் பல புரட்சிகர அறிமுகங்களை தனது உணவகங்களில் மேற்கொண்டுள்ளது.
உணவினை தானாக சென்று வழங்கக் கூடிய ‘கொன்வேயர் பெல்ட்’ மற்றும் பேசும் ரொபோ ட்ரோலிஸ் என என்பன அவையாகும்.
இதனால் ஊழியர்களின் நேரம் மீதமாவதுடன், துரிதமாக உணவும் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 food
Read more ...

100 மெகா பிக்ஸெல் கேமிராவை கண்டுபிடிக்கப்பட்டது

சீனாவைச் சேர்ந்த ஆய்வு நிலையம் ஒன்று 100 மெகா பிக்ஸெலுடைய (megapixel) CCD எனும் charge coupled device உடன் கூடிய கமெராவினைத் தயார் செய்துள்ளது.
சீன விஞ்ஞான நிலையம் எனப்படும் (CAS - Chinese Academy of Sciences) குறித்த நிலையம் தனது இந்தக் கண்டுபிடிப்புக்கான அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டது.

மேலும் இந்த புகைப்பட மற்றும் வீடியோ கமெராவே சீனாவில் இதுவரை தயாரிக்கப் பட்டவற்றில் மிக அதிகத் தெளிவுடன் கூடிய கமெரா எனவும் CAS அறிவித்துள்ளது. IOE3-Kanban எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கமெரா 10240x10240 pixel வீச்சமுடைய புகைப்படங்களை எடுக்கக் கூடியதாகும். இதைவிட மிகச் சிறியதாகவும் பாரம் குறைந்ததாகவும் உள்ள இந்த கமெராவின் நீளம் 19.3 cm என்பதுடன் 20 டிகிரியில் இருந்து 55 டிகிரி வரை எந்தவொரு வெப்பநிலையிலும் பாவிக்கக் கூடியதும் ஆகும்.

இந்தக் கமெராவின் அதியுயர் வீச்சமும் HDR எனப்படும் உயர் இயக்க வீச்சமும் காரணமாக அதிகத் தெளிவுள்ள புகைப்படங்கள் தேவைப்படும் துறைகளான வான்வழி மேப்பிங், நகரத் திட்டமிடல், இயற்கை அனர்த்த அவதானம் மற்றும் நுண்ணிய போக்குவரத்து வழிமுறைகள் போன்றவற்றிட்கு இது மிகவும் உபயோகப் படும் எனப்படுகின்றது. இதற்கு ஏற்றவாறு இக்கமெராவில் அதியுயர் ஆப்டிகல் முறைகளும், கட்டுப்பாட்டு முறைகளும், அதிகளவு வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவதற்கான இடவசதியும் (Storage) காணப்படுகின்றன.

இத்தனை வசதிகள் இருந்தாலும் இக்கமெரா எப்போது பொது மக்கள் பாவனைக்கு வரும் என்பது தெரியப் படுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ...

11 July 2013

தொடர்ச்சியாக வேலை செய்பவரா? ரிலாக்ஸ் செய்ய உதவும் இணையத்தளங்கள்


கணினியில் தொடர்ச்சியாக வேலை செய்பவர்கள் அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்துகொள்ளவதற்கென சில இணையத்தளங்கள் உதவுகின்றன. பொதுவாக இயற்கை  ஏற்படுத்தும் ஒலிகளே மனிதனை அதிகளவு ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்பதை அடிப்படியாக வைத்து மழை பெய்வது போன்றும் ஏனைய இசைகளை வைத்து அழகாக உருவாக்கப்பட்ட இணையத்தளங்களின் பட்டியல் இங்கே.

1.http://www.rainymood.com/

மழை பெய்யும்போது ஜன்னலோரத்திலிருந்து அதை ரசிப்பதுபோன்ற உணர்வைத்தருகின்றது இந்த தளம்.

2. http://www.calm.com/

கடல் அலையின் பிண்ணனியில் ரிலாக்ஸ் செய்வதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்குகின்றது இந்த தளம்.

3. http://thequietplaceproject.com/thequietplace

30 செக்கன்கள் எதுவுமே செய்யாமல் அமைதியானதொரு இடத்திற்குச் செல்லுங்கள் என்கிறது இத்தளம்.

4. http://www.donothingfor2minutes.com/

இரண்டு நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய உதவுகின்றது.

5.http://www.simplynoise.com/downloads.html

இயற்கை ஒலிகளை பட்டியலிடுகின்றது இத்தளம்.
Read more ...

11 இலட்சம் திரைப்படங்களை ஒரே சி.டியில் சேமிக்கலாம்


ஆப்டிகல் விஞ்ஞானத்தை 1873 ஆம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை. அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் கூ தலைமையில் பொறியியள் விஞ்ஞானிகள் ஒரு புது வகை வட்டை கண்டுபிடித்திருக்கின்றனர். இது சிடி / டிவிடி / ப்ளூ ரே தாண்டி ஒரு பெட்டாபைட் (10,48,576 கிகா பைட்) கொள்ளளவு கொண்டது. இந்த டிஸ்கின் மூலம் 11 லட்சம் டிவிடி குவாலிட்டி திரைப்படங்களை சேமிக்கவோ (1ஜிபி குறைவாக ஒரு எம்பி 4 திரைப்பட அளவின்படி கணக்கிடபட்டது) அல்லது 10 வருடம் 6 மாத ஹெச்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அல்லது 18 வருட எஸ் டி தொலைக்காட்சியியை இந்த டிஸ்கில் அடக்கி விடலாம்.

இது ஃபோக்கல் பாயின்ட் எனப்படும் லேசரின் நுணுக்கம் ஒரு மனிதனின் முடியை பத்தாயிரமாய் வகுந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு மிக துல்லியமான ஃபோக்கல் பாயின்ட் டெக்னாலஜி மூலம்தான் இந்த டிஸ்க் ரெடியாகி உள்ளது. மேலும் இது 100 X வேகம் கொண்டது.
Read more ...

எல்லா விதமான டெஸ்க்டாப் கணினிகளுக்கும் டிரைவர் எளிதில் இன்டால் செய்யலாம்.



 விண்டோஸ் கிராஸ் ஆகிவிட்டால் புதியதாக ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்படும் போது டிரைவர்களை அனைத்தும் புதியதாக செய்யப்பட வேண்டும். பெரும்பாலான கணிணி வைத்திருப்பவர்கள் அனைவரும் டிரைவர்களை வைத்திருப்பதில்லை.. டிரைவர் CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த டிரைவரை தேடுவோருக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதள்ளதாக அமையும். டிரைவர்களை எளிதில் கையாள இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மென்பொருள் பெயர் EASY DRIVER PACKS 
இந்த மென்பொருள் Google இணையத்தில் தேடினாலே கிடைக்கிறது.
மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குறிப்பிற்கு கீழே உள்ள படங்களை பார்த்து முயற்சி செய்யவும்
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போது உங்களது கணிணியில் டிரைவர்கள் இண்டால் செய்ய எல்லா விதமான பாக்ஸ்களையும் டிக் செய்து கொள்ளவும்
 இரண்டாவதாக எக்ஸ்டிராக் அண்டு இண்ஸ்டால் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்
அவ்வளவுதான் கணிணியில் எல்லா டிரைவர்களும் இண்ஸ்டால் செய்யப்பட்டுவிடும்.


Read more ...

03 July 2013

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள்
பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
 இல்லற வாழ்க்கை
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
பாரதியார் மீது பற்று      
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
அவரது படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
Read more ...

02 July 2013

உங்களால் முடியும் - படியுங்கள்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) இரண்டாம் தாளில் 15௦-க்கு 12௦ மதிப்பெண்கள் பெற்று, சமூக அறிவியல் பாடப்பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சபீதா, தற்போது கம்பம், மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்களுக்காக அவர் வழங்கிய டிப்ஸ் இதோ...
 

Read more ...

மகாத்மா காந்தியை பற்றிய சில தகவல்கள்

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தி
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள்
Read more ...

உலகின் அதிக வேக இணையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம்.
தென்கொரிய நிறுவனமான செம்சுங்  மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும்  2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.
இதேவேளை தென்கொரியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குனரான எஸ்.கே டெலிகொம் உலகின் அதிவேக கம்பியில்லா வலையமைப்பினை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வழமையான எல்.டி.இ.  வலையமைப்பின் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் தரவுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென எஸ்.கே டெலிகொம்  தெரிவிக்கின்றது.
மேலும் இது 3 ஆம் தலைமுறை வலையமைப்பினை விட 10 மடங்கு அதிக வேகமானதென  எல்.டி.இ சுட்டிக்காட்டியுள்ளது.
இச் சேவையானது ஆரம்பத்தில் சியோல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமெனவும் பின்னர் நாடு பூராகவும் விரிவுபடுத்தப்படுமெனவும் எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது.
உலகில் வேகமான வலையமைப்பு உபயோகிக்கும் நாடாக தென்கொரியாவும் ஒன்றாகும். அங்கு பல ஏற்கனவே 4ஜி எல்.டி.இ. தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Read more ...

பூமியதிர்ச்சியை முன்கூட்டியே அறியும் எறும்புகள்


பூமியதிர்ச்சி ஏற்படப் போவதை எறும்புகள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் இயல்புடைய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை ஆய்வாளர் கேப்ரியல் பார்பெரிக் தலைமையிலான குழுவொன்றே இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து இக்குழு ஆய்வு செய்துள்ளது. இவ்வாய்வு தொடர்பில் குறித்த ஆராய்ச்சிக் குழு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் புற்றில் ஓய்வெடுக்கும்.

ஆனால், பூமியதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பதாவவே இரவு நேரத்தில் அவை குடியிருக்கும் புற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன. பின்னர் பூமியதிர்ச்சி ஏற்பட்டதனையடுத்து அவை சாதாரண நிலைக்கு திரும்பிவிடுகின்றன. பூமியதிர்ச்சி ஏற்படும் வேளைகளில் நிலத்தின் கீழ் உருவாகும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக எறும்புகள் வெளியேறுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரினங்கள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறமாட்டாது. ஆனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வேளைகளில் மாறுபடும் காலநிலையை உணர்ந்தே உயிரினங்கள் செயற்படுகின்றதாக இதற்கு முன் பல ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளது.
Read more ...

தலை இல்லாமல் வாழ்ந்த அபூர்வ சேவல்


தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது. அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு “மைக்” எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. பின்னர் “அதி­சய சேவல் மைக்” என அழைக்­கப்­பட்­டது.

தலையை இழந்­தமை
1945 செப்­டெம்பர் 10 ஆம் திகதி, புருட்­டிடா நகர விவ­சா­யி­யான லொய்ட் ஒல்சென் என்­ப­வரின் வீட்­டுக்கு அவரின் மாமியார் சென்­றி­ருந்தார். அவ­ருக்கு விருந்­த­ளிப்­ப­தற்­காக கோழி­யி­றைச்சி கொண்டு வரு­மாறு ஒல்­செனை அவரின் மனைவி கோரினார். ஐந்­தரை மாத வய­து­டைய மைக் எனும் சேவலை ஒல்சென் தெரி­வு­செய்தார்.
அச்­சே­வலை அவர் தலையின் ஓர­மாக வெட்­ட­மு­யன்­ற­போது, ஒல்­செனின் கைக்­கோ­டரி நழு­வி­யதால் சேவலின் கழுத்­துக்­கூ­டாக செல்லும் நாடி தப்­பி­யது. அதன் ஒரு காது மற்றும் மூளையின் ஒரு­ப­குதி ஆகி­யன பாதிக்­கப்­ப­டாமல் இருந்­தன. (குரு­திக்­கு­ழாயில் ஏற்­பட்ட அடைப்­பொன்றின் கார­ண­மாக அதற்கு குரு­திப்­பெ­ருக்கு ஏற்­ப­ட­வில்லை என்­பது பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.)
அதனால் அச்­சேவல் தடு­மாறி நடக்கத் தொடங்­கி­யது. அது கூவு­வ­தற்கும் முயன்­றது. ஆனால் அது முடி­ய­வில்லை. எனினும், சேவல் உயி­ரி­ழக்­கா­ததால் வியப்­ப­டைந்த ஒஸ்லென் அதனை கவ­ன­மாக பரா­ம­ரிக்கத் தீர்­மா­னித்தார். கழுத்­துப்­ப­கு­தி­யி­லுள்ள உண­வுக்­கு­ழாய்க்குள் பால் மற்றும் தண்ணீர் ஆகி­ய­வற்றை “ஐ ட்ரொப் ஸ்ரிஞ்சர்” மூலம் செலுத்­தினார். சிறி­த­ளவு அரைத்த சோளத்­தையும் அவர் கழுத்­தி­லுள்ள உண­வுக்­குழாய் வழி­யாக ஊட்­டினார். இதனால் அச்­சேவல் மேலும் வளரத் தொடங்­கி­யது. ஏனைய கோழிகள், சேவல்­க­ளுடன் வளர்க்­கப்­பட்ட அச்­சேவல் அதி­கா­லையில் கூவவும் செய்­தது. அதன் தொண்­டை­யி­லி­ருந்து சத்தம் எழுந்­தது. ஏனைய சேவல்கள் கூவும் ஒலியைப் போல் அது இருக்­க­வில்லை.
பிர­பலம்
சில மாதங்­களில் இச்­சேவல் குறித்த தக­வல்கள் அமெ­ரிக்­கா­வெங்கும் பரவத் தொடங்­கின. பெரும்­பா­லானோர் அவற்றை கட்­டுக்­க­தைகள் எனக் கூறி நம்ப மறுத்­தனர். அதை­ய­டுத்து, உண்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அச்­சே­வலின் உரி­மை­யா­ள­ரான ஒஸ்லென் அதை சோல்ட்லேக் நக­ரி­லுள்ள உட்டா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு கொண்டு சென்றார். இச்­சேவல் குறித்த தக­வல்கள் உண்­மை­யென நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் இரண்டு தலை­யு­டைய கன்­றுக்­குட்டி போன்ற விநோத மிரு­கங்கள், பிரா­ணிகள் சகிதம் ஊர் ஊராக கொண்­டு­செல்­லப்­பட்­டது.
0.25 டொலர் கட்­டணம் செலுத்தி இச்­சே­வலை பார்க்க மக்கள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அதன் புகழ் உச்­சத்­தி­லி­ருந்த காலத்தில் மாதாந்தம் 4,500 டொலர் வரை அது திரட்­டி­யது. தற்­போ­தைய பெறு­ம­தி­யுடன் ஒப்­பிட்டால் அது 48,000 டொலர்­க­ள் டைம், லைவ் உட்­பட புகழ்பெற்ற சஞ்­சி­கைகள், பத்­தி­ரி­கை­களில் இச்­சே­வலின் புகைப்­ப­டங்கள் வெளி­யா­கின
Read more ...

ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்த முதல் இந்தியப் பெண்!


உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.அந்த சாதனையைத் தற்போது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால் ஏறி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால். ஜாம்ஷெட்பூரில் வாழ்ந்துவரும் இவர், 13 வருடங்களுக்கு முன்னால், தனது 35 வயதில், மேற்கு வங்கத்தில் உள்ள தல்மா மலையேறக் குழுவினருடன் இணைந்தார். இந்த மலையேற்ற நிகழ்ச்சி மூலம், தார் பாலைவனத்தில் நடத்தப்படும் ஒட்டகங்களின் சாகசப்பயணம் பற்றி அறிந்து, அதில் பங்குகொண்டார். இதற்குப்பின்னர், ஆப்பிரிக்காவின் ஏழு இயற்கை அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும், கிளிமாஞ்ஜெரோ சிகரத்தை அடையும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. பின்னர், கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டை அடைந்து, இந்திய நாட்டின் தேசியக் கொடியை அங்கு நாட்டினார்.

இந்த முயற்சி, அவருக்கு பிற நாடுகளின் உயரமான சிகரங்களையும் அடைந்து, அங்கும் இந்தியக் கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.
அந்த சாதனையையும் தற்போது பிரேமலதா நிகழ்த்தியுள்ளார். இந்த வருடம் மே மாதம், வடஅமெரிக்காவில் உள்ள மெக்கின்லே மலையின் தெனாலி சிகரத்தை அடைந்து, அங்கு இந்திய நாட்டுக் கொடியைப் பறக்கவிட்டதன் மூலம், தனது கனவை அவர் நிறைவு செய்துள்ளார்.
இதற்கு, அவருக்கு உறுதுணையாக இருந்தது, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் ஆவார். தற்போது, டாடா ஸ்டீல் குழுமத்தின் சாகச அமைப்பின் தலைவராக விளங்கும் இவர், பிரேமலதாவிற்கு மன மற்றும் உடல் ரீதியான பயிற்சிகளை அளித்து, இந்த சாதனையைப் புரிய அவருக்கு உதவிகரமாக இருந்தார்.மேலும்
மற்ற பெண்களும் தங்களுடைய குடும்பச்சூழலில் இருந்து வெளிவந்து, இதுபோன்ற சாகச அனுபவங்களைப் பெறவைப்பது என்பதே தனது அடுத்த விருப்பமாக இருக்கும் என்று பிரேமலதா தெரிவித்தார்.
Read more ...