12 July 2013

100 மெகா பிக்ஸெல் கேமிராவை கண்டுபிடிக்கப்பட்டது

சீனாவைச் சேர்ந்த ஆய்வு நிலையம் ஒன்று 100 மெகா பிக்ஸெலுடைய (megapixel) CCD எனும் charge coupled device உடன் கூடிய கமெராவினைத் தயார் செய்துள்ளது.
சீன விஞ்ஞான நிலையம் எனப்படும் (CAS - Chinese Academy of Sciences) குறித்த நிலையம் தனது இந்தக் கண்டுபிடிப்புக்கான அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டது.

மேலும் இந்த புகைப்பட மற்றும் வீடியோ கமெராவே சீனாவில் இதுவரை தயாரிக்கப் பட்டவற்றில் மிக அதிகத் தெளிவுடன் கூடிய கமெரா எனவும் CAS அறிவித்துள்ளது. IOE3-Kanban எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கமெரா 10240x10240 pixel வீச்சமுடைய புகைப்படங்களை எடுக்கக் கூடியதாகும். இதைவிட மிகச் சிறியதாகவும் பாரம் குறைந்ததாகவும் உள்ள இந்த கமெராவின் நீளம் 19.3 cm என்பதுடன் 20 டிகிரியில் இருந்து 55 டிகிரி வரை எந்தவொரு வெப்பநிலையிலும் பாவிக்கக் கூடியதும் ஆகும்.

இந்தக் கமெராவின் அதியுயர் வீச்சமும் HDR எனப்படும் உயர் இயக்க வீச்சமும் காரணமாக அதிகத் தெளிவுள்ள புகைப்படங்கள் தேவைப்படும் துறைகளான வான்வழி மேப்பிங், நகரத் திட்டமிடல், இயற்கை அனர்த்த அவதானம் மற்றும் நுண்ணிய போக்குவரத்து வழிமுறைகள் போன்றவற்றிட்கு இது மிகவும் உபயோகப் படும் எனப்படுகின்றது. இதற்கு ஏற்றவாறு இக்கமெராவில் அதியுயர் ஆப்டிகல் முறைகளும், கட்டுப்பாட்டு முறைகளும், அதிகளவு வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவதற்கான இடவசதியும் (Storage) காணப்படுகின்றன.

இத்தனை வசதிகள் இருந்தாலும் இக்கமெரா எப்போது பொது மக்கள் பாவனைக்கு வரும் என்பது தெரியப் படுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. 12 மெகா பிக்ஸெல் தெளிவு என்றால், 100 மெகா பிக்ஸெல் !!!

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete