02 July 2013

உலகின் அதிக வேக இணையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம்.
தென்கொரிய நிறுவனமான செம்சுங்  மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும்  2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.
இதேவேளை தென்கொரியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குனரான எஸ்.கே டெலிகொம் உலகின் அதிவேக கம்பியில்லா வலையமைப்பினை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வழமையான எல்.டி.இ.  வலையமைப்பின் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் தரவுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென எஸ்.கே டெலிகொம்  தெரிவிக்கின்றது.
மேலும் இது 3 ஆம் தலைமுறை வலையமைப்பினை விட 10 மடங்கு அதிக வேகமானதென  எல்.டி.இ சுட்டிக்காட்டியுள்ளது.
இச் சேவையானது ஆரம்பத்தில் சியோல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமெனவும் பின்னர் நாடு பூராகவும் விரிவுபடுத்தப்படுமெனவும் எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது.
உலகில் வேகமான வலையமைப்பு உபயோகிக்கும் நாடாக தென்கொரியாவும் ஒன்றாகும். அங்கு பல ஏற்கனவே 4ஜி எல்.டி.இ. தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment