15 October 2013

1 டெராபைட் வரை சேமித்துக்கொள்ளும் வசதி அறிவித்தது யாஹூ மெயில்

யாகூ மெயில் அதிரடி வசதிகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக சேமிப்பளவில் 1 டெராபைட் வரை அதிகரித்துள்ளது.
மின்னஞ்சல் சேவையொன்று இலவசமாக வழங்கும் சேமிப்பளவில் இதுவே மிக அதிகமானதாகும்.

மேலும் அனைத்து இயங்குதளத்திற்கும் ஏற்றது போன்ற வடிவமைப்பையும் அழகாக மாற்றியுள்ளது.

இதுவரை யாகூவின் மெயில் பிளஸ் என்ற கட்டணம் செலுத்தி பெறக்கூடிய வசதிகள் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது யாகூ நிறுவனம்.

1 எம்பி அளவுள்ள அட்டாச்மெண்ட் கோப்புக்களுடன் மின்னஞ்சல்களை சேமித்துவரும் ஒரு சாதாரண பயனாளர் 6 000  வருடங்களுக்கு தடையின்றி யாகூ மெயில் சேவையை பயன்படுத்தமுடியும் என தெரிவிக்கின்றது பிரபல தொழில்நுட்ப இணையத்தளமொன்று.

Read more ...

டச் ஸ்கிரீன் பற்றி சில தகவல்கள்..

altஇன்று பார்க்கும் நாம் டிஜிட்டல் தொழில்நிட்பம், டச் ஸ்கிரின் மற்றும் மொபைல் பிக்ஸல் கிளாரிட்டி என எல்லாமே டெக்னாலஜி வளர்ந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. மொபைல் போன், டேப்ளட் பிசி, தொலைக்காட்சிப் பெட்டிகள் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர்கள் என எதனைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் . காட்சித் திரைகளைப் மூன்று வகைகளில் பிரித்திடலாம். அவை - LCD, OLED, மற்றும் plasma ஆகும். மிக எளிமையான முறையில் இவற்றை இங்கு காணலாம்.

இப்போதெல்லாம், பிளாஸ்மா காட்சித் திரைகள், மிகப் பெரிய ஹை டெபனிஷன் டிவிக்களிலும், டிஜிட்டல் சைன் போர்டுகளிலுமே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் வண்ணங்கள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன.
எந்த ஒரு கோணத்தில், காட்சித் திரையிலிருந்து விலகி இருந்து பார்த்தாலும், வண்ணங்கள் இடம் மாறாது. எனவே தான், பொது இடங்களில் விளையாட்டு நிகழ்வுகளைக் காட்ட பெரும்பாலும் இது பயன்படுகிறது. ஒரு வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் நேரம் (response time)இந்த வகைத் திரையில் மிக மிகக் குறைவு.

இதனால், ஒரு வண்ணத்தில் இருந்து இன்னொரு வண்ணத்திற்கு எந்த பிசிறலும் இல்லாமல் உடனடியாக மாறக் கூடியவை பிளாஸ்மா திரைகளாகும். ஆனால், பிளாஸ்மா திரைகள் இயங்க அதிக மின் சக்தி தேவை; திரையின் தடிமனும் அதிகமாகவும் கனமாகவும் இருக்கும். எனவே இவற்றை மொபைல் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும் பயன்படுத்தவே முடியாது. சிறிய அளவில் இதன் திரை அமைக்கப்பட்டால், பெரிய அளவில் ரெசல்யூசன்களை இதில் கொண்டு வர இயலாது. தொடக்கத்தில் ஒரே அளவிலான ஒரு பிளாஸ்மா திரைக்கும் எல்.சி.டி. திரைக்கு மான விலையில் நிறைய வித்தியாசம் இருந்தது. தற்போது இந்த வித்தியாசம் வெகுவாகக் குறைந்து உள்ளது.

டிஜிட்டல் டிஸ்பிளே தொழில் நுட்பத்தில், அண்மைக் காலத்தில் மார்க்கட்டைக் கலக்கும் தொழில் நுட்பம் இது. சில விளம்பரங்களில் இதனை AMOLED Active Matrix Organic Light Emitting Diode எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த முதல் இரண்டு இணைப்பு சொற்களும், இதில் பிக்ஸெல்கள் எப்படி அடுக்கப்பட்டு இயங்குகின்றன என்று விளக்குகின்றன. காட்சியைக் கட்டுப் படுத்தும் கண்ட்ரோலர் எப்படி ஒவ்வொரு சிறிய பிக்ஸெல்லையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது என்பதை இது விளக்குகிறது. இருந்தாலும், இதில் மட்டுமே Active Matrix என்ற வகை உள்ளது என்று கூற இயலாது. இப்போது வரும் நுகர்வோர் சாதனங்களில் உள்ள OLED and LCD திரைகள் அனைத்துமே Active Matrix வகையையே பயன்படுத்துகின்றன. OLED வகைத் திரைக் காட்சியும் பிளாஸ்மா

ஓ.எல்.இ.டி. (OLED Organic Light Emitting Diode) போலவே செயல்படுகிறது. இங்கு ஓர் ஒளிக்கற்றையைக் கொண்டு வர கேஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதில் உள்ள எலக்ட்ரோடுகள், ஒளியை வெளிப்படுத்தும் ஓர் ஆர்கானிக் பாலிமரைக் கொண்டு வருகின்றன. இங்கு பாலிமர் என்பது, திரும்பத் திரும்ப வரும் மிகச் சிறிய மாலிக்யூல்கள் கொண்ட பெரியதொரு மாலிக்யூல்கள் ஆகும். OLED தொழில் நுட்பம் நிறைய அனு கூலங்களைக் கொண்டது. மிகக் குறைந்த அளவிலேயே மின்சக்தியைப் பயன்படுத்து கிறது. மிகக் குறுகிய அளவில், நேரடியாக ஒளியை வெளிப்படுத்துகின்றன. அதனாலேயே, ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் response time இதில் மிக மிக வேகமாகவும் குறைவான நேரத்திலும் இயங்குகிறது.

ஓ.எல்.இ.டி. (OLED Organic Light Emitting Diode) இதன் ஒரே பிரச்னை இதன் தயாரிப்பு செலவு தான். எல்.சி.டி. அல்லது பிளாஸ்மா வகைத் திரையைக் காட்டிலும், இதனைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும். தற்போது Super AMOLED Plus என சில வகைத் திரைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. OLED தொழில் நுட்பத்தில், ஆங்காங்கே மிகச் சிறிய வேறுபாடுகளைக் கையாண்டு இவை வெளிவரு கின்றன. ஆனால், செயல்பாட்டின் அடிப்படையில் இவை AMOLED தொழில் நுட்பம் கொண்ட வையே.

எல்.சி.டி. (LCD–Liquid Crystal Display) மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் காட்சித் திரை இதுதான். ஹை டெபனிஷன் டிவி, டெஸ்க்டாப், லேப்டாப் மானிட்டர் கள், டேப்ளட் பிசிக்கள் மற்றும் மொபைல் போன் திரைகள் என எங்கும் இது பயன் பாட்டில் உள்ளது. இதன் வகைகள் எனப் பல பேசப்பட்டாலும், அடிப்படையில் மூன்று வகைகள் பிரபலமானவை. அவை -- twisted nematic, InPlane Switching, and patterned vertical alignment. எல்.சி.டி. ட்விஸ்டட் நெமாடிக் (டி.என். அல்லது டி.என்.பிலிம் TN or TNFilm): இவ்வகைத் திரைகளின் பேனல்கள் மிக மலிவானவை. எனவே அதிக எண்ணிக்கையில் எளிதாகத் தயாரிக்க முடியும். வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் response time இதில் மிக மிகக் குறைவாகும். 2 மில்லி செகண்ட் கூட ஆகாது. ஆனால், மொத்த காட்சி வெளிப்பாட்டில் இவை சில குறைகளைக் கொண்டுள்ளன.

எல்.சி.டி. இன் - பிளேன் ஸ்விட்சிங் (IPS) மேலே டி.என்.பிலிம் வகை எல்.சி.டி. திரைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில், ஹிடாச்சி நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்தது. மற்ற எல்லா வகைகளிலும் இது உயர்ந்து இருந்தாலும், இதன் ரெப்ரெஷ் ரேட் தேவையான அளவு இல்லாததால், அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை.

எல்.சி.டி. வெர்டிகலி அலைன்டு (VA Vertically Aligned) மேலே கூறப்பட்ட இரண்டு வகைகளுக்கும் இடையேயான தன்மையைக் கொண்டது. ஐ.பி.எஸ். தொழில் நுட்பம், சற்று தாமதமாகவும், மந்த ஒளிக் காட்சியாகவும் திரையில் செயல்பட்டது. டி.என். வகை வேகமாகவும், நல்ல வெளிச்சக் காட்சியாகவும் இருந்தாலும், மொத்தத்தில் காட்சி தன்மையில் குறை வாகவே இருந்தது. இவற்றிற்கு இடையே வெர்டிகலி அலைன்டு தொழில் நுட்பம் உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் இந்த வகை தொழில் நுட்பத்தினைச் சிறப்பாகத் தருவதாகக் கூறி வருகின்றன.

எல்.இ.டி. (LED) மேலே கூறப்பட்ட வற்றில் இருந்து சற்றே சில மாறுதல் களுடன் எல்.இ.டி. (LED (lightemitting diode) மற்றும் டி.எப்.டி. காட்சித் திரைகள் தற்போது பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொலைக் காட்சிப் பெட்டிகளில் இவை பயன்படுத்தப்படுகையில், பெரிய அளவில் வண்ணங்கள் கிடைக்கின்றன. மிகவும் குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் இவை அதிக நாட்கள் உழைக்கக் கூடியவையும் ஆகும்.

டி.எப்.டி (TFT:ThinFilm Transistor) இந்த தொழில் நுட்பம் மேலே கூறப்பட்ட அனைத்து activematrix திரைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பு செலவு குறைவான வகைகளில் இது இடம் பெறுகிறது. மொபைல் போன்களில் பெரும் பாலும் இது பயன்படுத்தப்படுகிறது.

  லைப் ஸ்டைல் என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்


Read more ...

அறியப்படாத GOOGLE இன் சேவைகள் !!

                                                      1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):
images (3)தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.
2. கூகுள் திங்க் (Google Think)
கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.
Read more ...

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?


imagesகம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
Read more ...

14 October 2013

பூனையை கொஞ்சுபவரா நீங்கள்? சிஸ்ரோபெர்னியா... ஓ.சி.டி... வரும் உஷார்

நீங்கள் நாய்ப் பிரியரா... பூனை என்றால் உங்களுக்கு உயிரா? முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் இருக்கிறது.  ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கைகள் இப்போது வெளியே வந்து விட்டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத்தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்களுக்கு தொற்றுகிறது; அப்படி தொற்றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக கட்டுப்படுத்தி, ஏகப்பட்ட மூளை கோளாறுகளுக்கு காரணமாகிறது  என்ற உண்மையை விஞ்ஞானிகள் இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

சரி, இனி கொஞ்சம் ஆழ்ந்து போய்ப்பார்ப்போம்... பூனையிடம் அவ்வளவு சுலபமாக, பொறி வைக்காமலேயே சிக்கிக்கொள்கிறதே எலி...எப்படி? அதில் தான் இந்த ஒட்டுண்ணி பிறப்பு ஆரம்பிக்கிறது. எலி பிறக்கும் மூன்று மாதத்துக்கு உள்ளேயே ஒரு பாரசைட்...ஆம், ஒட்டுண்ணி அதன் மூளையில் உருவாகி விடுகிறது. இந்த ஒட்டுண்ணி, மூளையை அப்போதில் இருந்தே ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த ஒட்டுண்ணி பெயர் டெக்சோபிளாஸ்மா கோண்டீ.

எதை செய்ய வேண்டும்.  எதை செய்யக்கூடாது, எங்கே போகலாம், போகக்கூடாது என்பது முதல் பைத்தியமான காரியங்களை செய்வது வரை அவ்வளவையும் இந்த ஒட்டுண்ணி தான் கமாண்ட் செய்கிறது. எலிக்கு அதென்னவோ பூனை, பூனையின் சிறுநீர் என்றால் பிடிக்கும். அப்படி என்ன டேஸ்ட்டோ என்று எண்ண வேண்டாம். உண்மையில் இந்த ஒட்டுண்ணி வேலைதான்  அது. எலிக்கு பிடிக்காமலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தியது ஒட்டுண்ணி.

அதனால் தான் தெரிந்தே, பூனையிடம் மாட்டி இரையாகிறது எலி. சரி, எலியை கடித்து சாப்பிட்ட பூனை, ஏப்...என்று ஒரு ஏப்பம் விட்டு விட்டு படுத்து விடும்.
இந்த பூனை வீட்டுப்பூனையாக இருக்கலாம். திரியும் பூனையாக இருக்கலாம். எலியை பிடிப்பதில் பாகுபாடு இல்லை. எலியை சாப்பிடுவதிலும் வேறுபாடு இல்லை. அப்படியே தூங்கி  எழுந்த பின் டூ பாத்ரூம் போவதிலும் அவ்வளவு ஒற்றுமை.

அங்கு தான் பிரச்னையே. ஏற்கனவே, எலியை தின்றதால் அதன் மூளையில் உள்ள ஒட்டுண்ணி, பூனை மூளைக்கு போய் விடுகிறது. அது போகும் டூ பாத்ரூம் மூலம் ஒட்டுண்ணி, மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். வீட்டுப்பூனையாக இருந்தாலும், வெளிப்பூனையாக இருந்தாலும், இப்படி டூ பாத்ரூம் மூலம் மற்ற பூனைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும்  பரவி விடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நிபுணர் வெண்டி இங்க்ராம் தலைமையிலான குழு இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை செய்து பல திடுக்கிடும் தகவல்களை சேகரித்துள்ளது.
ஆராய்ச்சி முடிவுகளின் படி தெரியவந்த தகவல்கள்:

* டெக்சோபிளாஸ்மா கோண்டீ என்ற பாரசைட் தான் மனித மற்றும் உயிரினங்களின் மூளையை எல்லாவகையிலும் கட்டுப்படுத்துகிறது.
* இது ஒரு வகை ஒட்டுண்ணி. பிறக்கும் போதோ, மனிதன் மற்றும் சில உயிரினங்களுக்கு தொற்றுவதன் மூலமோ மூளையை அடைகிறது.
* பூனை, எலி போன்ற உயிரினங்களுக்கு அதன் பழக்க வழக்கங்கள், அணுகுமுறை போன்றவற்றில் மாற்றங்களை இந்த ஒட்டுண்ணி செய்கிறது.
* எந்த சமயத்தில் இந்த ஒட்டுண்ணி செயல்படும் என்று கூறுவது இயலாத காரியம். மூளையை கட்டுப்படுத்துவதில் வல்லமை படைத்தது.
* மனிதர்களை பொறுத்தவரை, மூளையை சீர்படுத்துவதை தவிர, மற்ற அபாய மாற்றங்களை செய்வது இந்த ஒட்டுண்ணி தான்.
* சிஸ்ரோபெர்னியா, பைபோலார் கோளாறு, அப்சசிவ் கம்பல்சிவ் சிண்ட்ரோம் போன்ற மூளைகோளாறுக்கு காரணமே இந்த ஒட்டுண்ணி தான்.
* பார்ப்பதற்கு சாதாரண மனிதராக தான் வளர்வர்;  ஆனால் போகப்போக பழக்க வழக்கம் மாறும். அதற்கு இந்த ஒட்டுண்ணியே காரணம்.
* இந்த பழக்க வழக்கம் மாறுவது முதல் பல வகை மன, மூளை கோளாறு வருவது வரை இந்த ஒட்டுண்ணி வேலை தான்.
* பூனை மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணி, மீன், பறவைகளுக்கும் கூட பரவும் ஆபத்து உண்டு.
* கொக்கு வாயில் தெரிந்தே சிக்கும் மீன்.  அப்படி மீன் நடந்து கொள்ள முதன் மூளையை ஆட்டிப்படைப்பதும் இந்த ஒட்டுண்ணியே.
* மனிதர்களை பொறுத்தவரை குழந்தை பருவத்தில் தொற்றவே வாய்ப்பு அதிகம். எப்போது வேண்டுமானாலும் அது செயல்பட ஆரம்பிக்கும்.
* பெண்களுக்கு அதிக அளவில் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஒட்டுண்ணி தொற்ற வாய்ப்பு அதிகம்.
*பூனை  முதல் மனிதன் வரை மூளையில் தொற்றும் ஒட்டுண்ணி, முதலில் செய்வது மூளையை பலமிழக்க வைப்பதுதான்.
* அடுத்து, தன் வசப்படுத்தி, மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதும் இந்த ஒட்டுண்ணி வேலை தான்.  இவ்வாறு ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூட்டை தொங்கும் பழக்கம்... சிரிப்பே இல்லாத உர்ர்...

* ஓ.சி.டி: மூளை கோளாறுகளில் ஒன்று தான் அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர். இது 99 சதவீதம் பேருக்கு பல வகையில் இருக்கும். ஆபத்தான பழக்க வழக்கங்கள் அதிமாகும் போது தான் சிகிச்சை எண்ணமே வருகிறது.
* வீட்டை பூட்டி விட்டோமா என்று பூட்டை பல முறை தொங்கிப்பார்ப்பது, 108 முறை பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு விட்டோமா என்று சந்தேகப்படுவது, சிறிய சத்தம் கேட்டாலும் கண்டபடி குழப்பம் அடைவது, ஏதாவது வாசம் வந்தால் சிலிண்டர் கேஸ் தானா என்று சந்தேகிப்பது இந்த வகை தான்.
* அவர் சிரிக்கவில்லை... நாம் ஏன் சிரிக்க வேண்டும் என்று உர்ர்ர் என இருப்பது, இவன் ஏன் சிரித்தான்  என்று  குழம்புவது, இவன் நமக்கு குழி தோண்டுகிறான்  என்று நண்பனை சந்தேகிப்பதும் இந்த ஒட்டுண்ணி வேலை தான்.
* சிரிப்பு, அழுகை, பதற்றம், குழப்பம் எல்லாமே நார்மல் அளவை தாண்டிவிட்டால் உஷாராக இருக்க வேண்டும்.
* சிஸ்ரோபெர்னியா: சம்பந்தமே இல்லாமல் பேசுவது, அடிக்கடி  உணர்ச்சிவசப்படுவது, தெரியாத விஷயங்களில் பயப்படுவது போன்றவை தான் இந்த கோளாறு.
* பைபோலார் டிசார்டர்: இந்த கோளாறு பெரும்பாலும் பெரிய திறமைசாலிகளுக்கு வர வாய்ப்பு அதிகம். சிறிய வயதில் பெரும் சாதனைகளை செய்திருப்பர்; குறிப்பிட்ட துறையில் சாதித்திருப்பவராக இருக்கலாம். ஆனால், எதிர்காலம் பற்றியோ, வாழ்க்கை பற்றியோ சிந்தனையே இருக்காது.
* பெரிய முடிவுகளை சுலபமாக  எடுத்து விட்டதாக நினைத்து, பிரச்னை குழியில் விழுந்து விடுவர். நம்பி மோசம் போவதும் இந்த ரகம் தான். இப்படி பிரச்னைகளில் தவிப்போருக்கு மூளை பாதிப்பு தான் இந்த கோளாறு.

கர்ப்பிணியா, விலகி நில்லுங்க
கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள், பூனையிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர். இதற்கு காரணம், இந்த ஒட்டுண்ணியே.  காரணம், இந்த ஒட்டுண்ணி, பிறக்கும் குழந்தை கருவிலேயே பாதிக்க வாயப்பு அதிகம்.
  பொதுவாக, மனித உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி பலவீனமாகும் போது இந்த ஒட்டுண்ணி வேலையை ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி விட்டு கோளாறுகளை ஆரம்பிப்பதும் இதன் வேலை
Read more ...

உங்களுக்கு ஜிமெயிலை பற்றி தெரியுமா?

ஒட்டுமொத்த இணையத்தையும் தன் வசப்படுத்த கூகுள் பல செயல்களை செய்து வருகிறது அதில் ஒரு முக்கியமான செயல் தான் ஜி மெயில்.

கூகுள் தரும் ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அவற்றில் சில வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். இங்கு நாம் அதிகம் பயன்படுத்தாத, சில முக்கிய வசதிகளைக் காணலாம். நாள் தோறும் பல மின்னஞ்சல் செய்திகள் நமக்கு வருகின்றன. இவற்றில் ஒரு சில முக்கியமானவையாக இருக்கும். ஒரு சிலவற்றிற்கு கட்டாயம் சில நாட்களில் பதில் அனுப்ப திட்டமிடுவோம். மொத்த அஞ்சல்களில் இவற்றை எப்படி விலக்கிப் பார்ப்பது.

இதற்கெனவே, இந்த அஞ்சல்களில் ஸ்டார் அமைத்து குறியிடும் வசதி தரப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸில், செய்தியை அடுத்து இடதுபக்கம் ஸ்டார் குறியிடும் இடம் தரப்பட்டுள்ளது. அனுப்பியவரின் பெயர் அடுத்து இது காணப்படும். இதில் ஒரு கிளிக் செய்தால், அதில் ஸ்டார் அடையாளம் இடப்பட்டு தனித்துக் காட்டப்படும். பின் ஒரு நாள் தேடுகையில், இந்த ஸ்டார் அமைந்துள்ள செய்திகளை மட்டும் தேடலாம். சரி, நீங்கள் எழுதும் அஞ்சலை எப்படி ஸ்டார் அமைப்பது? மெசேஜ் மேலாக இருக்கும் Labels என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Add star என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமானது என்று நீங்கள் குறிக்க விரும்பும் செய்திகளில் பல தரப்பட்டவை இருக்கலாம்.

சில உங்கள் வேலை சார்ந்ததாக இருக்கலாம். சில உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வந்திருக்கலாம். இவற்றை வேறுபடுத்தி முக்கியம் எனக் காட்ட, இந்த ஸ்டார்களை வெவ்வேறு வண்ணத்தில் அமைக்கலாம். பல வண்ணங்களில் அமைக்க, முதலில் அவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து உங்கள் பயன்பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும். இதற்கு, ஜிமெயில் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில், கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு General என்ற டேப்பில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இந்தப் பக்கத்தில் "stars" என்ற பிரிவைத் தேடிக் காணவும். இதில் மஞ்சள் வண்ண ஸ்டார் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். கீழாக மேலும் சில வண்ணங்களிலும் ஸ்டார் காட்டப்படும். எவை வேண்டுமோ, அவற்றின் மீது கிளிக் செய்து மேலே, மஞ்சள் ஸ்டார் அருகே வைக்கவும். ஸ்டார் மட்டும் இன்றி, மேலும் சில குறியீடுகளையும் காணலாம். இவற்றை விரும்பினால், அவற்றையும் அதே போல் இழுத்து மேலே வைக்கவும்.

இதன் பின்னர், கீழாகச் சென்று Save Settings என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி ஜிமெயில் பக்கத்தில் ஒரு செய்தியை ஸ்டார் செய்திடுகையில் முதலில் மஞ்சள் ஸ்டார் கிடைக்கும். தொடர்ந்து கிளிக் செய்திட, அடுத்தடுத்த வண்ணங்களில் ஸ்டார்கள் காட்டப்படும். எதனை அமைக்க விருப்பமோ, அது கிடைக்கும்போது கர்சரை எடுத்துவிடலாம். இவ்வாறு ஸ்டார் அமைத்த செய்திகளைத் தேடிப் பெறலாம். குறிப்பிட்ட வண்ணத்தில் அமைந்த செய்திகளைத் தேடுகையில் "has:" என்பதைப் பயன்படுத்தி தேடலாம். எடுத்துக்காட்டாக, தேடலை "has:yellowstar" என அமைக்கலாம்.

வீடியோ வழி பேச்சு ஜிமெயில் செய்திகளைக் காண்கையில்,வெளி ஊரில், வெளி நாட்டில் வாழும் உங்கள் நண்பரும் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருந்தால், உடனே அவரை அழைத்து, அவர் முகத்தினைப் பார்த்து உங்கள் அன்பைத் தெரிவிக்கலாம். வீடியோ காட்சியாக இது கிடைக்கும். இதனை உங்கள் ஜிமெயிலில் செயல்படுத்த Gmail voice and video chat இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். இதனை எளிதாக, டவுண்லோட் செய்து பதிந்து கொள்ளலாம்.

லேபில்களில் மின்னஞ்சல்கள் லேபில்கள் ஜிமெயிலில் போல்டர்கள் போலச் செயல்படுகின்றன. முக்கியமான மெயில்களுக்கு நல்ல வண்ணத்தில் லேபில்களைக் கொடுத்தால், அவற்றை எளிதாகத் தேடிப் பெறலாம். இதில் என்ன விசேஷம் என்றால், ஒரு மின்னஞ்சல் செய்திக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லேபிலை வழங்கலாம். நண்பர்கள் "Friends" என்ற லேபிலையும், உடனே பதில் போடு "Reply soon" என்பதற்கான லேபிலையும், ஒரே செய்திக்கு வழங்கலாம். லேபிலை உருவாக்க, ஜிமெயில் பக்கத்தின் இடது புறத்தில், லேபில் லிஸ்ட் கீழாக உள்ள More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Create new label என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் புதிய லேபிலின் பெயரை டைப் செய்து, பின்னர் Create என்பதில் கிளிக் செய்திடவும்.

லேபில்களில் மின்னஞ்சல்கள் செய்தியை லேபிலில் அமைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளுக்கு அடுத்து உள்ள செக் பாக்ஸைக் கிளிக் செய்து, பின் குறிப்பிட்ட லேபிலைக் கிளிக் செய்திடலாம். செய்தியைப் படிக்கும் போது, லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலை அமைக்கலாம். மெசேஜ் எழுதினால், அதனை அனுப்பும் முன் லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலிடலாம். லேபிலை நீக்க, வண்ணத்தை மாற்ற, அந்த லேபில் அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். இங்கு ஒரு மெனு கிடைக்கும். இதில் வண்ணம் மாற்றுதல், பெயர் மாற்றுதல், போன்ற பல மாற்றத்தை மேற்கொள்ளலாம். எப்படி போல்டர்களுக்குள், துணை போல்டர்களை உருவாக்குகிறோமோ, அதே போல இங்கு லேபில்களுக்கும், துணை லேபில்களை உருவாக்கலாம்.

மெயில்களை வடிகட்டுதல் ஜிமெயிலில் நமக்கு வரும் எண்ணற்ற மெயில்களை வடிகட்டிப் பயன்படுத்த, இதற்கான வடிகட்டிகள் (filters) உதவுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, மெயில்கள் தாமாகவே, குறிப்பிட்ட லேபில்களில் இணையும்படி செய்திடலாம்; ஆர்க்கிவ் எனப்படும் இடங்களில் பாதுகாக்கலாம்; அழிக்கலாம்; ஸ்டார் அமைத்து வேறுபடுத்தலாம் அல்லது மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்திடலாம். வடிகட்டிகளை உருவாக்குதல்: இந்த filter எனப்படும் வடிகட்டியை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

மெயில்களை வடிகட்டுதல் ஜிமெயில் தளத்தில் உள்ள சர்ச் பாக்ஸ் ஓரமாக உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். உங்களுடைய தேடல் வகை என்ன என்று பெற்றுக் கொள்ள ஒரு விண்டோ காட்டப்படும். உங்களுடைய தேடல் வகையினை இதில் இடவும். உங்கள் தேடல் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்திட சர்ச் பட்டனை அழுத்திக் கிடைக்கும் அஞ்சல் தகவல்களைப் பார்த்து உறுதி செய்திடவும்.

சரியாக இருந்தது என்றால், இந்த சர்ச் விண்டோவில் கீழாக உள்ள Create filter with this search என்பதில் கிளிக் செய்திடவும். இனி இந்த வடிகட்டி மூலம் என்ன செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என்று இங்கு தேர்ந்தெடுக்கவும். பலர், இவற்றை மெயில்கள் தாமாக, குறிப்பிட்ட லேபில் கீழ் அமையும்படி அமைக்கின்றனர். இதனால், இன்பாக்ஸ் அடைபடாமல், மெயில்கள் தாமாக, தனி லேபில் பெட்டியை அடைகின்றன. நமக்கு நேரம் கிடைக்கையில் இவற்றைத் திறந்து பார்க்கலாம். இதற்கு Skip the Inbox (Archive it) and Apply the label என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே பலவேறு வேலைகளுக்கான வடிகட்டிகளை உருவாக்கலாம்.

அடுத்து Create filter என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வடிகட்டி தயார். நீங்கள் வடிகட்டிகளைத் தயார் செய்தவுடன், அதில் செட் செய்ததற்கேற்ற மெயில்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டு, அந்த அந்த பிரிவுகளில் ஒதுங்கும். ஏற்கனவே கிடைக்கப்பட்ட மெயில்களும் அந்த வகையில் இருந்தால், அவையும் ஒதுக்கப்படும்.

ஆனால், செயல்பாடுகள் பின்னால் வரும் மெயில்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மெயில்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு பார்வேர்ட் செய்யும்படி வடிகட்டி ஒன்று அமைக்கப்பட்டால், அமைக்கப்பட்டதற்குப் பின்னர் வரும் மெயில்கள் மட்டுமே பார்வேர்ட் செய்யப்படும்.
Read more ...