22 May 2013

போன்களை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்: அமெரிக்க பெண் சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஏஷா காரே (Eesha Khare) மொபைல் ஃபோன்களை 20 செக்கனில் ரீசார்ஜ் செய்யக் கூடிய உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்து, விஞ்ஞான விருது பெற்று சாதனை படைத்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த வாரம் போனிக்ஸுக்கு இன்டெல் நிறுவனத்தின்...

விஞ்ஞான பொறியியல் கண்காட்சிக்கு வருகை தந்ததுடன் தனது படைப்பையும் அதில் முன் வைத்தார். இவரது கருவியை அங்கு ஏற்றுக் கொண்டதுடன் இவரைக் கௌரவித்து இளம் விஞ்ஞானிகளுக்கான இரு விருதுகளில் ஒன்றை அவருக்கு வழங்கினர். இவரது உபகரணம் நீள்சதுர வடிவிலுள்ள ஒரு சூப்பர் மின்தேக்கி (supercpacitor) ஆகும். இதில் மிகக் குறைந்த கொள்ளளவில் அதிக சக்தியைச் சேகரிக்க முடியும்.


மேலும் இதில் பயன்படுத்தப் பட்டுள்ள தொழிநுட்பத்தால் அவுட்டோ மாபைல் பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். ஏஷா காரே இற்குக் கிடைக்கப் பெற்ற உதவித்தொகை $50'000 டாலர்கள் ஆகும். கடந்த வாரம் இடம்பெற்ற இன்டெலின் இக் கண்காட்சியில் சுமார் 1500 இளம் விஞ்ஞானிகள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இளம் விஞ்ஞானிக்கான இரண்டாவது விருதைப் பெற்றவர் ஹென்றி லின் எனப்படும் இளைஞராவார், இவர் சிமுலேசன் முறையில் ஆயிரக் கணக்கான கேலக்ஸிகளின் கூட்டுக்கள் (clusters of galaxies) குறித்த விளக்கத்தை அளித்ததற்காக கௌரவிக்கப் பட்டார். இறுதியாக இக் கண்காட்சியின் முக்கிய விருதைப் பெற்றவர் 19 வயதான லோனுட் எனும் ரோமானியர் ஆவார்.


இவர் செயற்கை அறிவைப் பயன்படுத்தி மலிவான எரிபொருட் செலவில் சுயமாக ஓட்டக் கூடிய காரினை வடிவமைத்ததற்காக $75'000 டாலர்கள் பெறுமதியான இப்பரிசைத் தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு - 



1 comment:

  1. Eesha Khare அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    புதிய நல்லதொரு தகவலுக்கு நன்றி தோழரே...

    ReplyDelete